Wikipedia:உசாத்துணைப் பக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விக்கிபீடியாவுக்கு வருகை தரும் பயனர்கள், விக்கிபீடியா தளம் தொடர்பற்ற தங்கள் பொதுவான கேள்விகளை இங்கு கேட்கலாம் (எடுத்துக்காட்டு கேள்வி:பிங் பாங் என்றால் என்ன?). பிற பயனர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு, தங்களுக்கு விரைவாகவும் விரிவாகவும் விடை தர முயல்வர்.
பொருளடக்கம் |
[தொகு] பயனர் கேள்விகள்
[தொகு] செமண்டிக் வெப் என்பது என்ன? - RajaManjula
- en:Semantic Web --Natkeeran 19:33, 17 ஜூலை 2006 (UTC)
[தொகு] தமிழாக்கம் என்ன
xbox என்பதன் தமிழாக்கம் என்ன மேலும் video games என்பதன் தமிழாக்கம் என்ன --நிரோஜன் சக்திவேல் 01:36, 14 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] தமிழ்த் தட்டச்சு
- எத்தனை வகையான தமிழ் தட்டச்சு வகைகளால், தமிழ் மொழி இணையத்தில் ஏற்றப்படுகின்றன ?
- தமிழ் தட்டச்சு என வரும்போது எது நிலையானதாக (standardized) உள்ளது ?Darwinkumar
- பயனர்:Darwinkumar - 17 செப்டம்பர் 2006.
டார்வின்குமார், முதலில் ஒன்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழ் தட்டச்சு விசைப் பலகை வடிவமைப்பு வேறு, அது வலையில் உள்ளேற்றப்படும் encoding முறை வேறு. தமிழ் தட்டச்சு வடிவமைப்புகள் பல மாதிரிகளில் கிடைக்கின்றன. பாமினி, முரசு, தமிழ் தட்டச்சுப் பலகை, தமிழ்நெட்99, romaised என்பவை பிரபலமான சில விசைப்பலகை வடிவமைப்புகள். இவற்றிர் தமிழ்நெட்99 தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டதும், கணினியில் இலகுவாக தமிழ்த் தட்டச்சு செய்வதற்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்டது. இவற்றில் எந்த விசைப்பலகையை பயன்படுத்தி தட்டச்சு செய்தாலும், அவற்றை ஒரே முறையில் encoding செய்து வலையேற்ற முடியும். தமிழ் கணிமை தொடங்கிய காலம் தொட்டு பல்வேறு வகை encodingகளை தமிழக அரசும் உலகத் தமிழ் அமைப்புகளும் கால, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப பரிந்துரைத்து வருகின்றன. போன பத்தாண்டில் TSCII முறை encoding பிரபலமாக இருந்தது. தற்பொழுது பல தமிழ் தளங்களில் ஒருங்குறி (unicode - UTF8) முறை பிரபலமாகி வருகிறது. இம்முறையால் தேடுபொறிகளில் தமிழில் தேட இயல்வதும், எழுத்துரு பதிவிறக்கத் (font download) தேவை இல்லாமல் இருப்பதும் இதன் சிறப்பாகும். தமிழ் விக்கிபீடியா, திண்ணை, மரத்தடி,தமிழ்மணம்,பிபிசி தமிழ்,சீனத் தமிழ் வானொலி போன்ற பிரபலமான , உலகளாவிய தளங்களில் ஒருங்குறி முறையே பின்பற்றப்படுவதுடன், பெரும்பாலான தமிழ் கணிமை ஆர்வலர்களால் வருங்காலத்துக்கான நிலையான encoding முறை என்று திறமாக நம்பப்படுகிறது. --ரவி 09:59, 17 செப்டெம்பர் 2006 (UTC)