விஸ்வநாதன் ஆனந்த்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விஸ்வநாதன் ஆனந்த் (பிறப்பு: டிசெம்பர் 11, 1969, சென்னை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி ஜூலை 2006இல் ஆனந்த் 2779 புள்ளிகள் பெற்றார். ஆனந்த் மாத்திரமே 2800 புள்ளிகளைத் தாண்டிய நால்வரில் ஒருவர். இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்.
பொருளடக்கம் |
[தொகு] சதுரங்கமும் ஆனந்தும்
இந்திய செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் குறிப்பிடத்தக்கவர். 14 வயதில் 1983இல் தேசிய செஸ் சாம்பியன் ஆக 9/9 புள்ளிகள் பெற்றார். 15 வயதில் 1984இல் அனைத்துலக மாஸ்டர் (International Master) விருதினைப் பெற்றார். 16 வயதில் தேசிய சாம்பியனாகவும் மேலும் இருதடவை இந்தவிருதைப் பெற்றார். இவர் ஆட்டங்களை வேகமாக ஆடி லைற்றினிங் கிட் (lightning kid - மின்னல் வேகக் குழந்தை) என்ற பட்டப் பெயரையும் பெற்றார். 1987இல் உலக ஜூனியர் செஸ் சாம்பியனான முதலாவது இந்தியரானார்.
விஷி எனச் செல்லமாக இவரது நண்பர்களால் சில சமயம் அழைக்கப் படுகின்றார்.
[தொகு] உலகச் செஸ் சாம்பியன்
வெல்வதற்கான வாய்புக்களை மயிரிழையில் நழுவவிட்ட ஆனந்த் இறுதியாக 2000ஆம் ஆண்டில் தெகிரானில் அலெக்சி சிறோவ்-ஐத் 3.5 - 0.5 என்ற ரீதியில் தோற்கடித்ததன் மூலம் தமதாக்கிக் கொணடார்.
[தொகு] உலக அதிவேக செஸ் சாம்பியன்
அக்டோபர் 2003 இல் FIDE ஊடாக அதிவேக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
[தொகு] செஸ் பதக்கங்கள்
- 2003 அதிவேக செஸ் சாம்பியன்
- 2000 செஸ் சாம்பியன்
- 1987 உலக ஜூனியர் செஸ் சாம்பியன், கிராஸ்மாஸ்டர்
- 1985 இந்திய தேசிய சாம்பியன் - 16 வயதில்
- 1984 தேசிய மாஸ்டர் - 15 வயதில்
- 1983 தேசிய ஜூனியர் செஸ் சாம்பியன், 14 வயதில்
[தொகு] விருதுகள்
- செஸ் ஆஸ்கார் (1997, 1998, 2003 மற்றும் 2004)
- பத்மபூஷண் (2000)
- பிரித்தானிய் செஸ் பெடரேஷன் Book of the year விருது 1998.
- ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருது (1991-1992)
- தேசியக் குடிமகனுக்கான பத்மசிறீ விருது (1987)
- தேசிய விளையாட்டு வல்லுனருக்கான செஸ் விருது (1985)