வட மாகாணம், இலங்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வட மாகாணம் இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வட கோடியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு, அதன் மேற்கிலுள்ள தீவுகள் மற்றும் தலை நிலத்தின் ஒரு பகுதியான வன்னி என அழைக்கப்படும் பகுதியும் சேர்ந்து இம்மாகாணத்தை உருவாக்குகின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்கள் இந்த மாகாணத்துள் அடங்கியுள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] சனப் பரம்பல்
வட மாகாணத்தின் மொத்தச் சனத்தொகையில் x% மானவர்கள் 11% நிலப்பரப்பைக்கொண்ட யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயே செறிந்து வாழ்ந்து வந்தார்கள். 1995ல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக பெருமளவில் மக்கள், குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிப் பகுதியிலும், நாட்டின் வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் சென்று குடியேறிவிட்டதனால் இந்த விகிதாசாரம் இன்று பெருமளவு மாற்றமடைந்துள்ளது.
வடமாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் தமிழர்களாவர். இவர்களைவிட முஸ்லிம்களும், சிங்களவர்களும் சிறுபான்மையாக உள்ளனர். வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்திலேயே முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள். யாழ்ப்பாண நகரப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் அவர்கள் வாழ்கிறார்கள். இம் மாகாணத்தின் தெற்கு எல்லைப் பகுதிகளிலேயே சிங்களவர்கள் வாழ்கின்றனர். வவுனியாவிலும், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவர்கள் குடியேற்றங்கள் உண்டு.
சனத்தொகை | எண்ணிக்கை | நூ.வீதம் |
---|---|---|
மொத்தம் | 1,040,963 | 100% |
சிங்களவர் | NA | xx% |
இலங்கைத் தமிழர் | பொருந்தாது | xx% |
இந்தியத் தமிழர் | பொருந்தாது | xx% |
முஸ்லீம்கள் | பொருந்தாது | xx% |
பிறர் | பொருந்தாது | xx% |
பரப்பளவு | ||
மொத்தம் | 8884 ச.கி.மீ | |
நிலப்பரப்பு | 8390 ச.கிமீ | |
நீர்நிலைகள் | 494 ச.கிமீ | |
மாகாணசபை | ||
முதலமைச்சர் | xxxx | |
உறுப்பினர் எண்ணிக்கை | xxxx | |
நகராக்கம் | ||
நகர் | பொருந்தாது | xx% |
கிராமம் | பொருந்தாது | xx% |
[தொகு] முக்கிய நகரங்கள்
வடமாகாணத்தின் மிக முக்கியமானதும், பெரியதுமான நகரம் யாழ்ப்பாணமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. இதைவிட வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்களும் மாவட்டத் தலைநகரங்களாகும். பின்வரும் நகரங்களும் வடமாகாணத்திலுள்ள முக்கிய சேவை மையங்களாகத் திகழ்கின்றன.
- காங்கேசந்துறை
- பருத்தித்துறை
- சாவகச்சேரி
- சுன்னாகம்
- பண்டத்தரிப்பு
[தொகு] வரலாற்றுப் பின்னணி
யாழ்ப்பாண அரசு காலத்தில் தற்போதைய வடமாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் அவ்வரசின் மேலாதிக்கத்தின் கீழேயே இருந்துவந்தது. எனினும் வன்னிப்பகுதி பல வன்னியச் சிற்றரசுகளாகவே செயற்பட்டுவந்தது. யாழ்ப்பாண அரசு ஆரியச் சக்கரவர்த்திகளிடமிருந்து ஐரோப்பியரான போர்த்துக்கீசரிடமும் பின்னர் ஒல்லாந்தரிடமும் கைமாறியபோதும் கூட வன்னிப்பகுதியில் இவ் வன்னியர்கள் ஓரளவு அதிகாரத்துடனேயே இருந்து வந்தார்கள். ஆங்கிலேயர் காலத்திலேயே வன்னிப்பகுதி முற்றிலுமாக மத்திய அரசின் நேரடியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
[தொகு] பின்வருவனவற்றையும் பார்க்கவும்
இலங்கையின் மாகாணங்கள் | |
---|---|
மேற்கு | மத்திய | தெற்கு | வடக்கு | கிழக்கு | வடமேல் | வடமத்திய | ஊவா | சபரகமுவா |