மின்மாற்றி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மின்மாற்றி (Transformer)உயர் அல்லது தாழ் மின்னழுத்ததில் காவப்படும் மின்காந்த சக்தியை பாவனைக்கேற்ற மின்னழுத்தத்துக்கு மாற்றும் ஒரு மின்கருவி. குறிப்பாக மின்காந்த சக்தி உற்பத்தி நிலையங்கள் உயர் மின்னழுத்தில் நீண்ட தூரத்தில் இருந்து அனுப்பும் மின்காந்த சக்தியை பாவனைக்கேற்ற மின்னழுத்துக்கு மாற்ற மின்மாற்றிகள் பயன்படுகின்றன. மின்காந்த சக்தியை உயர் மின்னழுத்தில் அனுப்புவது மின்கம்பங்களில் ஆற்றல் வீணாவதை தடுக்கின்றது.
மின்காந்த சக்தி முழுமையாக காந்த புலத்தின் ஊடாக ஒரு திருகு சுருளில் இருந்து இன்னொன்றுக்கு மாறும் மின்னோட்டமாக தூண்டப்படலாம் என்ற மின்காந்த அடிப்படையில் மின்மாறிகள் இயங்குகின்றன. பொதுவாக, ஒரு இரும்பு உள்ளகத்தை இரு கம்பி சுருள்கள் சுற்றியதே மின்மாற்றி ஆகும். இரு கம்பி சுருள்களுக்கு நேரடி தொடர்பு இருக்காது, காந்த புலத்தின் ஊடாகவே தொடர்பு இருக்கும்.
[தொகு] கணித விபரிப்பு
மின்னழுத்தம் α சுருள்களின் எண்ணிக்கை
மின்னழுத்தத்துக்கும் மின்சுருள்களின் எண்ணிக்கைக்கும் நேர் விகித தொடர்பு உண்டு. உதாரணமாக முதன்மை சுருணையில் 100 சுருள்களும் இணை சுருணையில் 10 சுருள்களும் இருக்குமானல், அவ் மின்மாற்றி 100:10 அல்லது 10:1 என்ற விகிதத்தில் மின்னழுத்த மாற்றம் செய்யும். ஒரு கருத்திய மின்மாற்றியில் மின்னழுத்த மாற்றத்துக்கு ஏற்ப மின்னோட்டம் மாறி, ஆற்றல் அல்லது சக்தி எதுவும் இழக்கப்படமாட்டாது.
[தொகு] நுட்பியல் சொற்கள்
- மின்னழுத்தம் - Voltage
- மின்காந்த சக்தி - Electromagnetic Energy
- காந்த புலம் - Magnetic Field
- மின்கருவி - Electronic Device, Electric Device
- மின்செலுத்து கம்பிகளில், மின்காவு கம்பிகள், மின்பரப்புத் தடம் - Transmission Line
- உயர் மின்னழுத்தம் - High Voltage
- திருகு சுருள் - Spiral Coil
- உள்ளகம் - core