நுவோஸ்தனந்தே நெனோதந்தான
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நுவோஸ்தனந்தே நெனோதந்தான | |
இயக்குனர் | பிரபுதேவா |
---|---|
தயாரிப்பாளர் | எம்.எஸ் ராஜு |
கதை | பருச்சுரி பிரதர்ஸ், வீரு பொட்ல, எம்.எஸ் ராஜு |
நடிப்பு | சித்தார்த், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் |
இசையமைப்பு | தேவி ஸ்ரீ பிரசாத் |
ஒளிப்பதிவு | வேணு கோபால் |
படத்தொகுப்பு | கே.வி கிருஷ்ண ரெட்டி |
வினியோகம் | Sumanth Arts |
வெளியீடு | ஜனவரி 14, 2005 |
கால நீளம் | 165 நிமிடங்கள். |
மொழி | தெலுங்கு |
IMDb profile |
நுவோஸ்தனந்தே நெனோதந்தான(தெலுங்கு: నువ్వొస్తానంటే నేవొద్దంటానా) 2005 ஆம் ஆண்டு வெளிவந்த [[தெலுங்குத் திரைப்படங்கள்|தெலுங்கு மொழித் திரைப்படமாகு.பிரபு தேவா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தமிழில் சம்திங்சம்திங் உனக்கும் எனக்கும் என மறு தயாரிப்பு செய்து வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பொருளடக்கம் |
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இலண்டன் வாழ் நபரான சந்தோஷ் (சித்தார்த்) தனது சொந்தக் கிராமத்தில் நடைபெறும் சொந்தக்காரர் திருமணத்திற்காக இந்தியா செல்கின்றார்.அங்கு ஸ்ரீ (த்ரிஷா)வைச் சந்திக்கின்றார்.ஆரம்பத்தில் சண்டை போட்டுக் கொள்ளும் இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்ப்பிக்கின்றனர்.இவர்கள் காதலிப்பதைத் தெரிந்து கொள்ளும் ஸ்ரீயின் சகோதரனனான கிருஷ்ணனும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கின்றான்.ஆனால் அவன் கூறியது போல் விவசாய நிலத்தினை அதிகமாக யார் அறுவடை செய்கின்றாகள் என்ற போட்டியினையும் ஆரம்ப்பிக்கின்றான்.இவற்றை ஏற்றுக்கொள்ளும் சந்தோஷும் அப்போட்டியை வெல்கின்றான் அதே சமயம் ஸ்ரீ மீது காதல் கொள்ளும் கிருஷ்ணனின் நண்பனின் மகனும் அவளைத் தனக்கே திருமண்ம் செய்து தரும்படியும் கேட்கின்றான்.இதனைக் கிருஷ்ணன் மறுத்துக் கூறவே ஸ்ரீயைக் கடத்திச் செல்கின்றான் அவன்.இதனைத் தெரிந்து கொள்ளும் கிருஷ்ணாவும் சந்தோச்ஷும் அவளைக் காப்பாற்றுவதற்காகச் செல்கின்றனர்.அங்கு சந்தோஷ் எதிரியைக் கொல்லவே அப்பழியினை கிருஷ்ணன் ஏற்றுக்கொள்கின்றான்.பின்னர் ஸ்ரீ யும் சந்தோஷும் திருமணம் செய்துகொள்கின்றனர்.
[தொகு] விருதுகள்
[தொகு] 2005 தெலுங்கு பில்ம்பேர் விருது
- சிறந்த திரைப்படம் - எம்.எஸ் ராஜு
- சிறந்த நடிகர் - சித்தார்த்
- சிறந்த நடிகை - த்ரிஷா
- சிறந்த இசையமைப்பாளர் - தேவி ஸ்ரீ பிரசாத்
- சிறந்த துணை நடிகர் - ஸ்ரீஹரி
- சிறந்த ஒளிப்பதிவு - பிரபு தேவா
- சிறந்த ஆண் பாடகர் - சங்கர் மகாதேவன்
- சிறந்த பாடலாசிரியர் - ஸ்ரீ வெண்ணிலா
[தொகு] 2006 சந்தோஷம் திரைப்பட விருது
- சிறந்த இசையமைப்பாளர் - தேவி ஸ்ரீ பிரசாத்