நுண்கணிதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாற்ற வேக விகித கணிப்பீடு இயற்கையின் பல அம்சங்களை, அவற்றுக்கிடையான தொடர்பை விபரிக்கும் பொழுது, கணிக்கும் போது முக்கியம். மாற்ற வேக விகிதத்தை ஆயும், கணிக்கும் முறைகளை பிரதானமாக விபரிக்கும் இயல் நுண்கணிதம் (Calculas) ஆகும். அக்கணிப்புடன் தொடர்புடைய நீளம், பரப்பளவு, கனவளவு ஆகிவற்றை கணிக்கும் முறைகளையும் நுண்கணிதம் விபரிக்கின்றது. இன்று இயற்கையை பிரதிபலிக்கும் விஞ்ஞான - கணித மாதிரிகளுக்கு நுண்கணிதமே அடிப்படையாக அமைகின்றது, ஆகையால் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் நுண்கணிதம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. நுண்கணிததை வகைப்பு நுண்கணிதம், தொகைப்பு நுண்கணிதம் என இரு பெரும் பிரிவுகாளாக பிரிக்கலாம்.
கணிதத்தின் முக்கிய துறைகள் | தொகு |
---|---|
எண்கணிதம் | அளவியல் | அடிப்படை இயற்கணிதம் | வடிவவியல் | நுண்கணிதம் | புள்ளியியல் | முக்கோணவியல் | தருக்கவியல் | இடத்தியல் | பகுவியல் | ஏரணம் | முடிச்சியல் |