நாள்மீன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாள்மீன்கள் என்பன இரவில் வானில் ஒளிப் புள்ளிகளாய் தெரியும் மிகப்பெரிய, பேராற்றலை வெளிவிடும் பேருருண்டைகள். இவை நெடுந்தொலைவில் உள்ளதால் சிறியதாய் ஒளிப்புள்ளிகளாய்த் தெரிகின்றன. நாள்மீன்கள் உண்மையில் பகலில் தெரியும் கதிரவனை போன்றவையே. கதிரவனும் ஒரு நாள்மீன் தான். கதிரவன் நம் நில உருண்டைக்கு சற்று அருகில் இருப்பதால் ஒளியும் வெப்பமும் பெரிதாக உணரப்படுகின்றது. விண்ணில் தெரியும் நாள்மீன்களில் கணக்கற்றவை அளவில் கதிரவனைப் போன்று பன்மடங்கு பெரியனவாய் உள்ளன. நாள்மீன்களில் உள்ள அணுக்கருக்கள் ஒன்றோடு ஒன்று புணர்ந்து வேறு பொருள்களாய்த் திரிந்த வண்ண்மாய் உள்ளன. இவ்வாறு அணுக்கருப் புணர்ச்சி நிகழும் பொழுது எராளமான ஆற்றல் வெளிவிடுகின்றது. வெளிவிடும் ஆற்றலின் ஒரு முகம்தான் கண்ணுக்குப் புலப்படும் ஒளி.