ஜாவாஸ்கிரிப்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜாவாஸ்கிரிப்டு என்பது நெற்ஸ்கேப் (en:Netscape) நிறுவனத்தாரால் இணையப் பக்கங்களை உருவாக்க உதவும் கணினி நிரலாக்க மொழியாகும். ஜாவாஸ்கிரிட் ஆனது ஜாவாவுடன் பெயரளவில் நெருங்கியிருந்தாலும் நிரலாக்கலில் ஓரளவே நெருங்கியுள்ளன. ஜாவா ஸ்கிரிப்டானது சண் மைக்ரோசிஸ்டத்தின் வர்தகப் பெயராகும்.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
ஆரமபத்தில் நெட்ஸ்கேப் நிறுவனத்தால் லைட் ஸ்கிர்பிட் என அறிமுகம் செய்யப்பட்ட மொழியையே ஜாவாஸ்கிரிப்பட என பெயர் மாற்றப்பட்டு அறிமுகப் படுத்தப் பட்டது. இந்தப் பெயரின் தெரிவே இன்னளவும் பல குழப்பங்களுக்குக் காரணமாக அமைந்தது.
[தொகு] பாவனை
- பயனர்களிடம் இருந்து பெறுகின்ற தரவுகள் சரியா என்பதை உலாவியூடாகவே சரிபாத்துப் பின்னர் வழங்கியில்(சேவரில்) சேமிக்கும் வசதி.
- டயலாக் பாக்ஸ் மற்றும் பொப்பப் விண்டோக்களை உருவாக்குதல்.
- பயனர்களின் மவுஸ் அசைவுகளைகளிற்கு எடுத்துக் காட்டாக படங்களிற்கு மேலாக மவுஸ் செல்லும் போது படங்களை மாற்றுதல்
[தொகு] ஜாவாஸ்கிரிப்டில் தமிழ்
ஜாவாஸ்கிரிப்டில் தமிழைப் பயன்படுத்த தமிழ் செய்தியை ஒருங்குறியில் தட்டச்சுச் செய்து பின்னர் கோப்பை UTF-8 முறையில் சேமிக்க வேண்டும் மாறாக கோப்பை யுனிக்கோட்டாக சேமித்தால் இண்டநெட் எக்ஸ்புளோளர் அச்செய்தியைக் காட்டுமெனினும் பயர் பாக்ஸ் உலாவி செய்தியெதனையும் காட்டாது.
<script type="text/javascript"> alert('சோதனைச் செய்தி') </script>