சந்திரசேகர வெங்கட ராமன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman, நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970), நோபல் பரிசு பெற்ற பிரபல இந்தியப் இயற்பியலாளர் ஆவார்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
இவர் ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். இளம் வயதிலேயே, ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விசாகப்பட்டினம் நகருக்கு இடம் மாறினார். இயற்பியலிலும், ஆங்கிலத்திலும் அவரது BA, MA பட்டங்களை சென்னை, பிரெசிடென்சி கல்லூரியில் பெற்றுக்கொண்டார். இந்திய சிவில் சேவையில் சேர்ந்து, உதவிக் கணக்காளர் நாயகமாகக் கல்கத்தாவில் பணிபுரிந்தார்.
[தொகு] நோபல் பரிசு
பின்னர் 15 ஆண்டுகள் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் பேராசிரியராக இருந்தார். இங்கே தான் ஒளியியலில் அவருடைய ஆராய்ச்சிகள் அங்கீகரிக்கப்பட்டன. ஒளிச் சிதறலில் அவர் செய்த ஆராய்ச்சிக்காகவும், இராமன் விளைவு என்று அறியப்படுகின்ற விளைவைக் கண்டுபிடித்தமைக்காகவும், 1930 ல், இயற்பியலுக்கான நோபல் பரிசு ராமனுக்கு வழங்கப்பட்டது. முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு நோபல் பரிசு கிடைத்தது இதுவே முதல் தடவையாகும்.
1934 ல், பெங்களூரிலுள்ள, இந்திய அறிவியல் நிறுவனத்துக்குப் பணிப்பாளரானார். 1949 ல், ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார்.
[தொகு] விருதுகள்
1929 ல், பிரபுப் பட்டம் (Sir) பெற்ற இவர், 1954 ல் பாரத ரத்னா பட்டம் பெற்றார்.