ஆத்திச்சூடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஔவையாரைப் பற்றி அறியாத தமிழரே இருக்கமாட்டார். அதற்க்குக் காரணம் ஆத்திச்சூடி போன்ற அவரது நீதிநூல்களே ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திச்சூடி.
பொருளடக்கம் |
[தொகு] நூல்
- ஆசிரியர்: ஔவையார்
- பாடல்கள்: 108
- இலக்கணம்: காப்புச் செய்யுள் -1
[தொகு] கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
[தொகு] உயிர் வருக்கம்
- அறம் செய விரும்பு
- நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.
- ஆறுவது சினம்
- கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
- இயல்வது கரவேல்
- உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஓளிக்காது கொடு.
- ஈவது விலக்கேல்
- ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
- உடையது விளம்பேல்
- உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
- ஊக்கமது கைவிடேல்
- எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
- எண் எழுத்து இகழேல்
- கணித, இலக்கண நூல்களைத் தவிற்காமல் நன்கு கற்க வேண்டும்.
- ஏற்பது இகழ்ச்சி
- இரந்து வாழ்வது இழிவானது.அதனால் யாசிக்கக் கூடாது.
- ஐயம் இட்டு உண்
- யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.
- ஒப்புரவு ஒழுகு
- உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடுபொருந்துமாறு நடந்துகொள்.
- ஓதுவது ஒழியேல்
- நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
- ஔவியம் பேசேல்
- ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
- அஃகஞ் சுருக்கேல்
- அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே,
[தொகு] பிற வருக்கங்கள்
- உயிர்மெய் வருக்கம்
- ககர வருக்கம்
- சகர வருக்கம்
- தகர வருக்கம்
- நகர வருக்கம்
- பகர வருக்கம்
- மகர வருக்கம்
- வகர வருக்கம்